தனி ஒருவன்
தரமான படம்.. இன்னும் பார்கவில்லை என்றால் மேலே படிக்க வேண்டம்..
ஒரு வரி கதை : எய்தவன் இறுக அம்பை நோவானேன் என்று எய்தவனை குறி வைக்கும் IPS ஜெயிதனா தோற்றான ?
கதை களம் ஒன்றும் நமக்கு புதிதல்ல, திரைகதை பின்ன பட்ட விதம் சூப்பரு, ஆரம்ப சில கட்சிகள் அலுப்பு தட்டினாலும், அக்கட்சிகளுக்கு பின்பாதியில் நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குனர். நயன்தாரா முதல் நண்பர்களாக வரும் அனைவரும் கனகட்சிதமாக பாத்திரத்தில் பொருந்துகிறார்கள்.
நான் ரசித்தவை :
1. ஹீரோவுக்கு ஒரு flashback வைக்காமல், ரொம்ப நல்லவனாக கட்டுவதுகு மேனகெடாமல், video games போல soduku போல குற்றங்களை நூல் பிடித்து சென்று அழிப்பது ஒரு addiction அவ்ளவே .. completly buyable!
2. நாயகிக்கு ஒப்புக்கு சப்பாணியாக இல்லாமல், mild comedy, காதல், IPS பயிற்சி விலகி forensic படிப்பு பின்பாதி உபயோகமாய் இறுத்தல் என்று கணம் சேர்த்திருக்கிறார்
3.செயின் பறித்தவர்கள் எங்கு , என்ன செய்திருப்பார்கள் என்று யூகிக்கும் கட்சி.. வில்லன் தன் ரூமுக்குள் வந்ததை உறுதி படுத்தும் கட்சி இரண்டும் அருமை
4. அரவிந்த் சுவாமி, 18 குழந்தைகளை சோதனை முயற்சியில் கொன்று 19 குழந்தையை I'll Miss you எனும் பொது மிரட்டுகிறார்,
அப்பாவுக்கு குரங்கு கதை சொல்வதாகட்டும்,climaxல் மக்களை பார்த்து நடுவிரல் கட்டுவதகட்டும், டென்ஷன் ஆகாமல் புன்னகை மாறாமல் வில்லத்தனம் செய்து கிடைத்த இடத்தில எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.. அவர் மேல் கோவம் மட்டும் வரவே மாட்டேன்குது..
Spl Mention : தம்பி ராமையா , கொஞ்சம் கிச்சு கிச்சு கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கலக்கிடார்
IMO : நயன்தாரா portion கொஞ்சம் குறைத்து நண்பர்களுடனான கட்சிகளை கொஞ்சம் சேர்த்திருக்கலாம் , டூயட்க்கு கத்தரி போட்ருக்கலாம் , அரவிந்த் ஸ்வாமின் GF , உலக அழகி Finalist எவ்ளோ அழகா இருந்திருக்கணும்.. போங்க பாஸ்!
பாடகள் : தீமை தான் வெல்லும் & காதல் கிரிகெட் ஹிட்டு
???? : மற்ற மூன்று நண்பர்களை பெரிதாக உபயோகிக்காதது ஏன் ? அந்த கடலுக்கு அடியில் இருக்கும் formula என்ன ஆனது Part II வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
ஜெயம் ரவி ஹீரோனாலும் ஈர்ப்பது என்னவோ அரவிந்த் சுவாமியே..! :)
Comments
Post a Comment