Naan E

நான் ஈ - திரைப்பட விமர்சனம்

இரண்டு முறை ticket reserve செய்தும் சூழ்நிலை காரணமாக போகமுடியாமல் மூன்றாவது முறை weekdays la அடம்பிடித்து பார்த்த  படம்..

நான் ஈ படத்தின் இயக்குனர் ராஜமௌளியின் சில படங்களை பார்த்திருக்கிறேன்.. அவற்றுள் Sye & Magatheera are my personal Favorites.. Magatheera பார்த்துவிட்டு கோல்கொண்டா போர்ட் சென்றே ஆக வேண்டும் என அடம் பிடித்து போனவருடம் இதே ஆகஸ்ட் மாதம்.. வெற்றிகரமாக அந்த ஆசையை நிறைவேற்றியாச்சு..
  
இப்போ நம்ம விமர்சனத்துக்கு வருவோம்

கதை ஒன்றும் நமக்கு புதிதல்ல.. கதாநாயகியின் மேல் ஆசைப்பட்டு கதாநாயகனை கொன்ற வில்லனை கதாநாயகன் மறுஜென்மம் எடுத்து பழி வாங்குகிறார்.. கதைகளமே  புதிது..  Fantacy + நம்ம ஊரு மசாலாவின் சரியான கலவை  = நான் ஈ
 
படத்திற்கு  பெரிய + Animation, அணைத்த காட்சிகளும் ரொம்பவே fresh.             ஈக்களின் பெரிய கண்களை எந்த வகையான expressionஉம் கொண்டு வரமுடியவிடினும் அதன் அசைவுகளை வைத்து விளையாடி இருகிறார்கள்.. ஒலிப்பதிவு  மற்றும் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்கின்றன..



வில்லனாக சுதிப் தன் நடிப்பால் பெரிதும் ஈர்க்கிறார், இல்லாத ஈயை பார்த்து பயப்படுவது போல நடிப்பது சுலபமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.. அவரை ஈ செய்கிற இம்சையில்  அரங்கம் அதிர்கிறது..

சமந்தா micro artistஆக வருகிறார், அழகாக மிகவும் அழகாக இருக்கிறார் நடிக்கவும் செய்கிறார்.. படத்தில் அவருக்கு இன்னும் அழகான பெயர் சுட்டியிருக்கலாம்.. ஏனோ அவருக்கு பிந்து என்ற பெயரை மனம் ஒப்ப மறுக்கிறது..

டென்னிஸ் பந்தில் ஈ மாட்டிகொண்டு  பந்தாடப்படும்  கட்சியை ஏற்கனவே  Bee Movieயில் பார்த்திருக்கிறோம், அதேபோல்  Meeting roomமில் சுதிப் foreign delegatesஐ சந்திக்கும் பொழுது ஈ செய்யும்  இம்சையினால்  contract cancel ஆவதும் வேலைக்காரன் படம் வந்த காலத்திலயே பார்த்து சலித்த கட்சி.. ஆனால் படத்தின் வேகத்தை இவை கொஞ்சமும் தடை செய்யவில்லை என்றே தான் சொல்ல வேண்டும்.

கொஞ்ச நேரமே வந்தாலும் சந்தானம் சிரிக்க வைக்கிறார்..

 வண்டு, பட்டாம்பூச்சி, குரங்கு, டிநோசருஸ் இன்னும் பற்பல உயிரினங்களை வைத்து நிறைய Hollywood animation படங்களை பார்திருபினும், சமகால இந்திய சினிமாவிற்கு இது ஒரு சோதனை முயற்சியே.. அதை அணைத்து வயதினரும்/ தரப்பினரும்  ரசிக்கும் வண்ணம் படைத்திருக்கும் வகையில் ராஜமௌலி ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.

நல்ல படம்.. தியேட்டர் சென்று பாருங்க.. 










Comments

Post a Comment

Popular posts from this blog

What "to" & "not to" say to an autistic mom.

Restart Life

The Crux of My Enigmatic Big-Decision!