வெகுளாமை - Restraining Anger

 பால்: அறத்துப்பால்

அதிகாரம் : வெகுளாமை



1. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்

2. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

பொருளுரை :

1. உங்களுக்கு கீலே உள்ளவங்க கிட்டே நீங்க ஈஸியா கோவம் படுறீங்களே மேலே இருக்குறவர்ட்ட அப்பிடி கோவப்படமுடியுமா? உண்மையான பக்குவப்பட்டவர் வலியவர் மேலே கோவப்படாதவர் 2.சரி மேலே இர்ருக்குறவர்த்த கோவப்பட்ட என்ன ஆகும் நமக்கே ஆப்பா வந்து முடியும் அது நமக்கு தெரியும்.. பட் வள்ளுவர் என்ன சொல்றர்னா அந்த ஆப்ப விட கீலே இருக்குறவர்ட்ட கோவப்பட்டால் இன்னும் பெரிய ஆப்பு நமக்குத்தான், சமயம் வரப்ப செஞ்சி விட்டுட்டு போயிடுவார்


உதாரணம் :
நம்ம சிவகுமார் சார் எவ்ளவு பண்பான ஆள் பட் ஒரு முறை கோவாவிட்டு தனக்கு கீழ உள்ள விசிறி கைபேசியை தட்டி விட்டதுனால எவ்ளோ கேலிக்கு உள்ளனர்

 






3.மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

4.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

5.தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

6.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

7.சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.



பொருளுரை :

3. ஓகே கோவப்படாம இருக்க முடியாது , அப்பிடி கோவப்பட்டாலும் சீக்ரம் மறந்துடனும், மனசுலயே வச்சுக்க கூடாது 
4. சிரிப்பையும்  சந்தோஷத்தையும் காலி பண்ற கோவம் உன்னக்கு நீயே வச்சுக்குற ஆப்பு 
5.உன்ன  நீ  காப்பாத்திக்கணும்னா கோவத்தை விட்டுடனும் ஏன்னா கோவப்படுறது மத்தவங்கள விட உன்னக்கு தான் கெடுதி , 
6. உன்னக்கு மட்டும் இல்ல உன்ன சுத்தி உள்ளவர்களுக்கும் கெடுதி 
7.கோவம் தான் பெருசுனு நினைக்குறது , தரைல கையால ஓங்கி அடிக்குறது மாதிரி முட்டாள் தனம் 

உதாரணம் :
நீலாம்பரி கோவத்தால தன்னையும் அழிச்சுகிட்டா தன் குடும்பத்தின் சந்தோஷத்தையும் அழிச்சா

ராவணன் சூர்ப்பனகை கோவம் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டும் இல்லது ஒரு இனத்தையே அழித்த கதை சொல்லவும் வேணுமா?



8.இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பொருளுரை :
8. நமக்கு ஒருத்தர் கெடுதல் பண்ணா கூட அவர் மேல கோவப்படுறது அவருக்கு இல்ல நமக்கு தான் கெடுதல்

உதாரணம்:
தலைவர் சபதத்துல ஜெயிச்சாலும் நிம்மதி போச்சே வயசு வாழ்கை போச்சே 




9.உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
பொருளுரை :
9. மனசுல நினைச்சதெல்லாம் நடக்கும் , யாருக்கு கோவப்படாத ஆளுக்கு

உதாரணம்:
கோவப்படாம ஸ்வீட்டா இருந்ததால வசுந்தரா நீலாம்பரிய ஓவெர்ட்கே பண்ணி தலைவரை கரெக்ட் பண்ணிட்டாங்க



10.இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

பொருளுரை :
10. அளவிற்கு அதிகமா கோவம் கொள்றவர் இறந்தவைக்கு சமம்னு சொல்லறார் வள்ளுவர் , கோவம் கொள்ளாதவர் இறந்தாலும் வாழ்வார் .

உதாரணம்:




Disclaimer: We all can agree to disagree. Also I didn't mean fans are beneath the artist in the given situation artist have the upper hand over the fans, that's what I mean as melae and keelae

Comments

Popular posts from this blog

The Crux of My Enigmatic Big-Decision!

What "to" & "not to" say to an autistic mom.

Restart Life